

மதுரை மாநகர் பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் வெளியிட் டுள்ள அறிக்கை:
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் மதுரையில் இன்று முருகன் வழிபாடு யாத்திரை நடை பெறுகிறது. அவர் மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார். முன்னதாக, புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை வடக்கு, தெற்குத் தொகுதி பாஜக சார்பிலும், பழங்காநத்தம் ரவுண்டானாவில் மதுரை மேற்கு மற்றும் மதுரை மத்தியத் தொகுதி பாஜக சார்பிலும், திருப்பரங்குன்றம் கோயில் அருகே திருப்பரங்குன்றம் தொகுதி பாஜக சார்பிலும் வர வேற்பு அளிக்கப்படுகிறது எனக் கூறி உள்ளார்.