எஸ்பிஐ வங்கி தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அழைப்பு

எஸ்பிஐ வங்கி தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அழைப்பு
Updated on
1 min read

வங்கி தேர்வுக்கான இலவச ஆன்-லைன் வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது கோவிட்-19 காரணமாக அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலா ததால் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து போட்டியாளர்களும் வீட்டி லிருந்தபடியே பயனடையும் வகையில் இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்புத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் 2000 புரொபேஷனரி ஆபீசர் பணிக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பணிக்கான தேர்வு எழுத விண்ணப் பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8-ம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன.

இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமுள்ள மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 94990 55946 என்கிற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in