திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் அம்மா இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் அம்மா இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சிவன் அருள் தகவல்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணிபுரியும் பெண்கள் ‘அம்மா இரு சக்கர வாகனம்’ வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "பணி புரியும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தமிழக அரசு மானியம் வழங்கி வரு கிறது. இந்த திட்டத்தின் மூலம் அம்மா இரு சக்கர வாகனம் வாங்கும் பெண்களுக்கு வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.31,250 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2020-21-ம் ஆண்டுக்கான இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 1,158 நபர்க ளுக்கும், நகர்புறத்தில் 615 பேர் என மொத்தம் 1,773 பேருக்கு இரு சக்கர வாகனம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த பணிபுரியும் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று உடனடியாக அவற்றை பூர்த்தி செய்து வழங்க வேண் டும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். .மிகவும் பின்தங்கிய மலைப் பகுதிகளில் வசிப்போர், பழங்குடியினத்தைச் சேர்ந்த வர்கள், பட்டியல் இனத்தவர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமண மாகாதோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில் செய்யும் பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் பணியாளர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in