விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் திட்டப் பணி தொடக்கம்

விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் திட்டப் பணி தொடக்கம்

Published on

அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.444.71 கோடி மதிப்பீட்டிலான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார்.

சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை மற்றும் விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி ஆகிய இடங்களில் தாமிரபரணியை நீர் ஆதாரமாகக் கொண்டு சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பூமி பூஜை செந்நெல்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். திட்டப்பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in