

கரூர் அமராவதி ஆற்றில் கழிவு நீரை கலக்கும் நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அமராவதி ஆறு கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 282 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணிக்கிறது. கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைந்து வருகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால் விவசாயம் பாதிக்கப் படுகிறது. பொதுமக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின் றனர். எனவே, அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், கரூர் மாவட்டத்தில் எத்தனை சாயப் பட்டறைகள், ஆலைகள், தொழில கங்கள் உள்ளன? இவற்றில் எத்தனை நிறுவனத்தின் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது? கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு தண்ணீர் கொடுக்கப்படுகிறது? எவ்வளவு கழிவுநீர் வெளியேற்றப் படுகிறது? என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினர் அமராவதி ஆற்றில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை டிச.3-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.