அரிசி கடத்திய 2 பேர் கைது

அரிசி கடத்திய 2 பேர் கைது
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலசை பகுதியில் சேர்ந்தமரம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடையாலுருட்டியைச் சேர்ந்த மாடசாமி(35), ராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in