

சென்னை செல்ல இருந்த பாமகவினர் 100 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக சென்னையில் நேற்று தொடங்க இருந்த போராட்டத்துக்கு, பங்கேற்க கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு அக்கட்சியினர் 100 பேர் வாகனங்களில் புறப்பட தயாராகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூலனூர் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நேற்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.