

மேலூர் பகுதியில் சாலையோர பழம், காய்கறிக் கடைகளில் எடை குறைவாக விற்பதாக வந்த புகாரின்பேரில் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ.மைவிழிச் செல்வி தலைமையில் துணை ஆய்வர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
இதில், மேசைத்தராசு 14, எலக்ட்ரானிக் தராசு 2 உட்பட 70 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் குறைவாகக் கூலி வழங்கிய 9 நிறுவனங்களிடம் இருந்து 15 தொழிலாளர்களுக்கு ரூ.2,84,991 நிலுவைத்தொகை பெற்றுத்தரப்பட்டது.