

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சகாதேவபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசும்போது, “அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் அரசின் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். பணியாளர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், மாநகர பகுதி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.