டெல்டாவில் 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி உறுதி முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கருத்து

டெல்டாவில் 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி உறுதி முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கருத்து
Updated on
1 min read

திமுக இளைஞரணிச் செயலா ளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேவராயநேரி பகுதியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக கொடியை ஏற்றிவைத்து அக்கட்சியின் முதன்மைச் செயலா ளர் கே.என்.நேரு பேசியதாவது:

டெல்டா பகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து வருகிறார். மேற்கு மாவட்டங்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என அதிமுகவினர் மார் தட்டுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.

இதுதவிர சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார்.

ஆலோசனைக் கூட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in