தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையை அடுத்து, தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைமீறி, திருநெல்வேலி சந்திப்பு அருகே மீனாட்சிபுரத்தில்  ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய பெண்களிடம், வெள்ள அபாயம் குறித்து அறிவுறுத்திய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோயில்பிள்ளை. படம்: மு.லெட்சுமி அருண்
புயல் எச்சரிக்கையை அடுத்து, தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைமீறி, திருநெல்வேலி சந்திப்பு அருகே மீனாட்சிபுரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய பெண்களிடம், வெள்ள அபாயம் குறித்து அறிவுறுத்திய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோயில்பிள்ளை. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருநெல்வேலி வந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் தென்மாவட்ட கடற்பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் திருநெல்வேலி வந்துள்ளனர். ஒரு குழுவுக்கு 20 பேர் வீதம் 3 குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் தங்கியுள்ளனர்.

துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் கூறும்போது, “வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான மீட்பு படகுகள், சாலைகளில் விழும் மரங் களை வெட்டி அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

ஆற்றில் குளிக்க தடை

திருநெல்வேலிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளுக்கு செல்ல இவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 60 பேரும், போலீஸாரும், தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் இருந்து மீனவர் கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கடலோர கிராமங்கள் முழுவதும் கண்காணிப்பில் உள்ளன. மீனவர்களை தங்கவைக்க 7 பல்நோக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்லவில்லை என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in