ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளது
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளால் எய்ட்ஸ் பாதிப்பு 0.29 சதவீமாக குறைந்துள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை யில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 112 மையங்கள் மூலம் இதுவரை 18 லட்சத்து 30 ஆயிரத்து 354 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, 18 ஆயிரத்து 700 பேருக்கு எய்ட்ஸ்/எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1.27 சதவீதமாக இருந்தநோய் தொற்று விகிதம் தொடர் நடவடிக் கைகளால் 2020-ம் ஆண்டில் 0.29 சதவீதம் என்றளவுக்கு குறைந்துள்ளது.

இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 7 லட்சத்து 95 ஆயிரத்து 128 கர்ப்பிணி பெண்களில் 1,439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கூட்டு மருந்துகள் வழங்கப்பட்டு தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 265 பேர் கூட்டு மருந்து உட்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பூர்ணிமா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன், துணை இயக்குநர் (காசநோய்) டாக்டர் ஜெய உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

இதில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மருத்துவர் மீரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in