

மதுரை மாவட்ட திமுகவின் செல்வாக்கு சரிவதாகவும், மூர்த்தி எம்எல்ஏவுக்கு சீட் கிடைக்காது எனவும் சில நாட்களாக சமூக வலை தளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் விசாரணை நடத்தி தலைமைக்கு அறிக்கை அளித்தனர்.
இதன்பேரில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.பா.ர.அண்ணாமலை, மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர் வி.பாலாண்டி ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்படஅனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுவதாக அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.