சிவகங்கையில் 35-வது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா

சிவகங்கை பஸ் நிலையம் அருகே தனியார் மகாலில் நடந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்துப் பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்.
சிவகங்கை பஸ் நிலையம் அருகே தனியார் மகாலில் நடந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்துப் பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்.
Updated on
1 min read

புத்தகக் கண்காட்சியை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தொடங்கி வைத்தார். சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் ஜவஹர் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, எழுத்தாளர் சந்திரகாந்தன் பெற்று கொண்டார். காந்திகிராமப் பல்கலை. பேராசிரியர் ஆனந்தகுமார், நல்லாசிரியர்கள் பகீரதநாச்சியப்பன், கண்ணப்பன், சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கச் செயலாளர் குருசாமி மயில்வாகனன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் தங்கமுனியாண்டி, பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி டிச.8 வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும். விழா ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in