திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நலத் திட்டங்களுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக்குழு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘கரோனாவைரஸ் பரவியதால், தமிழக அரசுசார்பில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் ரூ.1000 பொது முடக்க நிவாரணத் தொகையை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதி இருந்தும் நிவாரணத் தொகை பெற முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளஅட்டை பெறவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை,இதர அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

மனுதாரர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, சார்பு நீதிமன்ற வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், விவரங்களுக்கு 0421 2230123 என்ற எண்ணில் வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். புறநகர் பகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகள் தாராபுரம், உடுமலை, அவிநாசி, காங்கயம், பல்லடம் பகுதிகளில் செயல்படும் வட்ட சட்டப் பணிகள் குழுக்களைஅணுகலாம்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in