

தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியுள்ள நிலையில், வைகை ஆற்றில் ஓரளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால், மதுரை யானைக்கல் தரைப் பாலத்தைத் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
குருவிக்காரன் சாலைப் பாலத்தை மேம்பாலமாக மாற்றும் பணிக்காக அப்பாலத்தையொட்டி வைகை ஆற்றுக்குள் அமைத் துள்ள தற்காலிக தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் வாகனங்கள் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அண்ணா நகர், கேகே. நகர் பகுதிகளில் இருந்து வைகை ஆற்றின் தென் கரைக்குச் செல்லும் வாகனங்கள் ஏவி மேம்பாலம் மற்றும் அண்ணா நகர் - பிடிஆர் மேம்பாலம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் பிடிஆர் பாலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க தெப்பக்குளம் சிக்னலில் போக்குவரத்து மாற்றி யமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெப்பக்குளம் சிக்னலில் வாகனங்கள் நின்று செல்லாத வகையில் ஒருவழிப் பாதையாக்கப்பட்டுள்ளது. விரக னூர் பகுதியில் இருந்து அண்ணா நகருக்குச் செல்லும் வாகனங்கள் மருது பாண்டியர்கள் சிலையைச் சுற்றிச் செல்கின்றன.
மதுரை நகரிலிருந்து திருப்பு வனம் செல்லும் வாகனங்கள் தெப்பக்குளம் மேற்குப் பகுதிச் சாலை, அனுப்பானடி சாலை, தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளி வழியாகச் சென்று தோரண வாயிலை அடைந்து செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அதேபோல், காமராசர் சாலை, முனிச்சாலைப் பகுதிகளில் இருந்து அண்ணா நகர், வண்டி யூர் செல்லும் வாகனங்கள் தெப்பக்குளம் மேற்குப் பகுதி, தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் காவல்நிலையம் வழியாகச் சென்று மருதுபாண்டியர்கள் சிலையைக் கடந்து பிடிஆர் பாலத்தில் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
தெப்பக்குளம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல் லும் விதமாக மாற்றியமைக் கப்பட்டாலும் நகருக்குள் இருந்து அண்ணா நகர், வண்டியூர் செல்வோர் தெப்பக்குளத்தைச் சுற்றவேண்டி உள்ளது. இதனால், மருதுபாண்டியர்கள் சிலை அருகில் கடும் நெரிசல் ஏற் படுகிறது.