திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் ஏற்றப்பட்ட கார்த்திகை  தீபம்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை மகா கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ. 21 முதல் 30-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும். விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தின மும் காலை, மாலை பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.

அதனையொட்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன் தினம் மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. கார்த்திகை தீபம் ஏற்று வதற்காக 300 கிலோ நெய், 100 மீட்டர் அளவு கொண்ட நூல் திரி, நான்கரை அடி உயரம் கொண்ட தாமிரக் கொப்பரைக்கு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன்பாக மூலவர் களுக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தாமிரக் கொப்பரை, 300 கிலோ நெய், 100 மீட்டர் அளவுள்ள திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கொப்பரைக்கு அக்னி லிங்க பூஜை நடைபெற்றது.

மாலை 6 மணியளவில் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து இன்று தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கார்த்திகை விழாவையொட்டி காவல் உதவி ஆணையர் சிவபிரசாத் தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள், 25 எஸ்.ஐகள் உட்பட 250 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று மாலை கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் சென்று சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளினார். பின்னர், இவ்விரண்டு இடங் களிலும் சொக்கப்பனை ஏற்றப் பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in