

தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் கடல்சார் உணவுப்பொருட்கள் வணிக மையம் வாயிலாக பேக்கரி உரிமையாளருக்கான மீன் சேர்த்த பேக்கரி உணவுப்பொருட்கள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இப்பயிற்சியில் கல்லூரியின் மீன் பதப்படுத்துதல் தொழில்நுட்பத்துறை தலைவர் (பொ) எம்.முருகானந்தம் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் பா.சுந்தரமூர்த்தி மதிப்புகூட்டிய மீன் உணவுப் பொருட்களுக்கான வியாபார வாய்ப்பு குறித்து விவரித்தார்.
கடல்சார் உணவு ப்பொருட்கள் வணிக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா. கணேசன் மீன்களில் உள்ள சத்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கினார். பிரெட், பிஸ்கட் மற்றும் கேக் போன்றவற்றில், அவற்றின் சுவை, மணம், திடம், நிறம் மற்றும் தோற்றம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏதுமின்றி மீன் சேர்த்து தயாரிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார்.
மீன்சேர்த்த பேக்கரி உணவுப்பொருட்கள் தயாரிப்பதற் கான தொழில் நுட்பம் குறித்து பேக்கரி உரிமையாளர் களோடு விவாதிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மீன்சேர்த்த பேக்கரி உணவுப்பொருட்களின் விற்பனை வாய்ப்பு குறித்தும் கருத்துகள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேக்கரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.