

சென்னை-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணி குறித்து தவறான பிரச்சாரம் செய்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித் துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன துணைப்பொது மேலாளர் கே.னி வாஸ், திட்ட அலுவலர் அஜித்குமார் ஆகியோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. மதுரை கப்பலூர் வரை எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக 60 அடி அகல நிலத்துக்கு உரிமையாளர்களிடம் இருந்து உபயோக உரிமை 2004-ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது. இதற்காக நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதத் தொகை ஏற்கெனவே உரிமையாளர்களுக்கு வழங் கப்பட்டது. ஏற்கெனவே பதிக் கப்பட்டுள்ள எண்ணெய் குழாய் அருகிலேயே புதிய எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் நில உரிமையா ளர்களுக்கு கூடுதலாக நிலத்தின் சந்தை மதிப்பில் 20 சதவீதம், பயிர் செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைச்சல் மதிப்பில் 7 மடங்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. ஏற்கெனவே உபயோக உரிமை பெற்ற நிலத்திலே புதிதாக குழி தோண்டி குழாய் பதிக்கப்படும்.
தற்போது மதுரை வரை பதிக்கப்பட்டுள்ள அதே தடத்திலும், மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய தடத்திலும் குழாய் பதிக்கப்படும். இப்பணி 2021 பிப்ரவரியில் முடிவடையும். இக்குழாய் வழியாக எரிவாயு அனுப்புவதன் மூலம் நுகர்வோருக்கு பல நன்மைகள் கிடைக்கும். மதுரை மாவட்டத்தில் 25 கிராமங்கள் வழியாக 115 கி.மீ. குழாய் பதிக்கப்படுகிறது. 30 கி.மீ. பணி முடிந்துள்ளது.
மேலூர் தாலுகா கம்பூரில் சமூக ஆர்வலர்கள் எனக் கூறும் சிலர் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எரிவாயுக்காக கிணறு தோண்டப்படும் என்றும், எரிவாயு உற்பத்தி செய்யப்படும் என்றும் பலவித தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஆனால் நில உரிமையாளர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இழப்பீடு உள்ளிட்ட தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சமூக ஆர்வலர்களின் சந்தேகங் களைத் தீர்க்க அழைத்தால் கோட்டாட்சியரின் கூட்டத்துக்கு வர மறுக்கின்றனர். அடுத்தடுத்த கிராமங்களிலும் தவறான பிரச் சாரம் செய்கின்றனர்.
இதனால் திட்டப் பணிகள் தாமதம் ஆகிறது. நாட்டின் வளர்ச்சித் திட் டமான இதில் எந்த ஆபத்தும் இல்லை. புதிதாக எந்த நிலமும் கையகப்படுத்தப்படவும் இல்லை. வீட்டுமனை, தொழிற் கூடங்கள் என மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் வழியாக குழாய் பதிக்கப்படாது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டத்தை நிறை வேற்றுவோம் என்றனர்.