

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று கோயில் பதினாறுகால் மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பழங்கால வழக்கப்படி கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர். ஆனால் மலைமேல் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி போலீஸார் அனுமதி மறுப்பதால், பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர். இது ஆகம விதிகளுக்கு முர ணானது எனக்கூறி இந்து முன் னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்து முன்னணியினர் பதினாறு கால் மண்டபம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் உதவி ஆணையர் சிவ பிரசாத் தலைமையில் 250 போலீ ஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.