வைஸ்ராய் ரெசிடென்ஸி ஓட்டல் ராமநாதபுரத்தில் திறப்பு

வைஸ்ராய் ரெசிடென்ஸி ஓட்டல் ராமநாதபுரத்தில் திறப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம் பாரதி நகரில் வைஸ்ராய் ரெசிடென்ஸி, பீமாஸ் நளபாகம் ஓட்டல் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது.

ஐஸ்வர்யாஸ் ஓட்டல் மற்றும் பேக்கரீஸ் நிர்வாக இயக்குநர் பி.வெங்கடசுப்பு வரவேற்றார். ஜமால் முகம்மது, ரஹ்மத் பீவி ஆகியோர் தலைமை வகித்தனர். கனகமணி மருத்துவமனை மருத்துவர் மதுரம் அரவிந்தராஜ் குத்துவிளக்கேற்றினார்.

வைஸ்ராய் ரெசிடென்ஸியை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரித் தாளாளர் சின்னத்துரை அப்துல்லா திறந்து வைத்தார். பீமாஸ் நளபாகம் ஓட்டலை கிருஷ்ணா சால்ட் ஒர்க்ஸின் உரிமையாளர் சித்தார்த்தன், ஐஸ்வர்யம் ஹாலை தொழிலதிபர் காபத்துல்லா, காந்தி விவாஹா ஹாலை கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் காந்தி, ஆலோசனை அரங்கத்தை ஆல்வின் மெட்ரிக். பள்ளி நிர்வாகி துளசிராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in