

நிவர் புயலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொ.சந்திரசேகர், கோட்டாட்சியர் ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.