‘போலி காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை’

‘போலி காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை’
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத காப்பீட்டு திட்ட அட்டைகளை போலியாக வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை உள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவல கம் மூலம் அடையாள அட்டை கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது.

ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள சில கணினி மையங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தனி நபர்கள் சிலர் ரூ.20 முதல் ரூ.150 வரை கட்டணம் பெற்றுக்கொண்டு போலி காப்பீட்டுத்திட்ட அட்டைகள் வழங்கி வருவ தாக புகார்கள் வருகின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மோசடி தொடர்பாக 18004253993 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in