திருவண்ணாமலையில் பாமக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் நேற்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் பலராமன் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், “வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக சார்பில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பது, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளதுபோல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு வரும் 10-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்வது” என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், நகரச் செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in