

மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
2016-ம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகள் வழக்கு களை விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத் திற னாளிகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி வாதிட்டார்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.