

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி சமூக அறிவியல் துறை சார்பில், முன்னாள் பேராசிரியை எலிசபெத் ஜார்ஜ் நினைவுக் கருத்தரங்கு- 2020 இணையவழி மூலம் நடந்தது.
இதில் ஐதராபாத் சமூக மேம்பாட்டு நிறுவனப் பேராசிரியை கல்பனா கண்ணபிரான் பேசியதாவது: இந்திய வரலாற்றில் சாதி, ஆணாதிக்க அமைப்பினை கேள்விக் குள்ளாக்கி உரிமைக்காகப் பணியாற்றியவர்கள் பெண்கள். பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சாவித்திரிபாய் போன்றோர் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போரா டினர். அந்த வரிசையில் தற்காலப் பிரச்சினைகள், ஒடுக்குதல் களை எதிர்த்துப் பெண்களும், தங்களது உரிமைகளுக்காக ஆதிவாசிப் பெண்களும் போராடுகின்றனர், என்றார்.
முதல்வர் கிறிஸ்டியானா சிங், முன்னாள் முதல்வர் சாந்தி மேனுவல், உதவிப் பேராசிரியை வித்யா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
முன்னதாக சமூக அறிவியல்துறை தலைவர் சிந்தியா மேரி மாத்யூ வரவேற்றார். உதவிப் பேராசிரியை தனலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியை அனிதா திபேன் நன்றி கூறினார்.
சமூக அறிவியல், உளவியல் துறை பேராசிரியைகள், மாணவர்கள், பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் என நூறுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.