ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு அணைக்கட்டுக்கு 42 ஆயிரம் கனஅடி நீர்வரத்து ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்ட உபரிநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டை கடந்து வெளியேறும் வெள்ள நீரை பார்வையிட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டை கடந்து வெளியேறும் வெள்ள நீரை பார்வையிட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
Updated on
1 min read

பொன்னையாற்றில் இருந்து அதிகப்படியான நீர்வரத்து பாலாற்றுக்கு வருவதால், வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை நில வரப்படி அரக்கோணத்தில் 56.20 மி.மீ, ஆற்காட்டில் 114, காவேரிப் பாக்கம் 85.20, சோளிங்கரில் 23.3, வாலா ஜாவில் 96.10, அம்மூரில் 88.60, கலவையில் 56.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பொன்னையில் நீர்வரத்து

நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொன்னையாற்றில் 20 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து பாலாற்றில் கலந்தது. ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பாலாறு அணைக்கட்டில் நீர்வரத்து 42,600 கன அடியாக இருந்தது.

கால்வாயில் தண்ணீர் திறப்பு

பாலாறு அணைக்கட்டு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி கொள்ளளவு கொண்டது. ஆணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அணையின் மதகுகள் வழி யாக காவேரிப்பாக்கம், மகேந்திர வாடி ஏரிகளுக்கும் தூசி, சக்கர மல்லூர் கால்வாய் வழியாக 4,500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. கால்வாய் வழி யாக வெள்ளநீர் திருப்பி விடப் பட்டதை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று பார்வையிட்டார்.

பாலாறு அணைக்கட்டு பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 125 நிவாரண முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மழையால் யாரும் உயிரிழக்க வில்லை. மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் விவசாயி களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 512 ஏக்கர் நெல், 62 ஏக்கர் நிலக்கடலை,13 ஏக்கர் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் கனமழையால் சேதமடைந்துள்ளன. மேலும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அப்போது, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான், காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in