TNadu
மேட்டூர் அணை நீர்மட்டம் 99 அடியானது
மேட்டூர் அணையில் நீர்வரத்தை விட நீர் திறப்பு குறைவாக உள்ளதால், நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 99.32 அடியானது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,561 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,512 கனஅடியானது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 250 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 99.32 அடியானது. நீர் இருப்பு 63.96 டிஎம்சி-யாக உள்ளது.
