மழை வெள்ளம் பாதிப்பு விழுப்புரம் பகுதிகளில் திமுக நிவாரண உதவி

விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பொன்முடி எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.
விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பொன்முடி எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.
Updated on
1 min read

விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பொன்முடி எம்எல்ஏ நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்கினார். விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் கந்தசாமி என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்ததில் அவரின் மனைவி ராஜேஸ்வரி உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய பொன்முடி, திமுக சார்பில் நிவாரண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.

இதுகுறித்து பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு அதிகாரிகள் இல்லை. விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், இச்சாலையோரமாக உள்ள 50 கிராமங்களில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் நேரில்ஆய்வு செய்து தண்ணீரைவெளியேற்ற நடவடிக்கை எடுக் கவில்லை. தற்போது, ஆட்சியரிடம் கூறியுள்ளேன். அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்துள்ளார்.வெள்ளம் புகுந்த வீடுகளுக்கும், பயிர் சேதமடைந்த விவசாயி களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், புஷ்பராஜ், மாநில மருத்துவஅணி துணை செயலாளர் டாக்டர் லட்சுமணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in