

மதுரை தல்லாகுளம் சிங்கராயர் காலனியைச் சேர்ந்தவர் குருபியார் முஜி. இவர் கடந்த மாதம் 21-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் சில நாட்களில் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதை அறிந்த அதிர்ச்சியில் குருபியார் முஜியின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக உடனே போலீஸில் புகார் அளிக்க முடியாத சூழலில், நேற்று முன்தினம் குருபியார் முஜி புகார் அளித்தார். அதன்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.