

தமிழகத்தில் நடக்கும் தொடர் போராட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
உயர் நீதிமன்றக் கிளை பார் அசோசியேஷன் சார்பில் காணொலி வழியாகச் சட்ட தின விழா நடந்தது. அசோசியேஷன் தலைவர் என்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். இதில் உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:
நாட்டில் அனைவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டக் கடமைகள் பல்வேறு வகையில் மீறப்படுகின்றன. அரசியல்வாதிகள் வாக்குக்காக மதம், சாதி, மொழியின் பெயரால் மக்களைப் பிரிக்கின்றனர். கொள்கை வகுப்போர் தேர்தலை மனதில் வைத்து மக்களைப் பிரிக்காமல் சரிசமமாகப் பாவிக்க வேண்டும்.
நாட்டில் சிறப்பான அடிப்படை உரிமைகள் உள்ளன. இந்த உரிமைகள் மீறப்படும்போது நீதி மன்றத்தை அணுகலாம். ஆனால், உரிமைக்கான சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. முதலில் அரசியல் தளங்களிலும் தற்போது சமூக வலைதளங்களிலும் உரிமைச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நாட் டில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அதிகளவில் போராட்டங்கள் நடக்கின்றன. தொடர் போராட் டங்களால் மாநிலத்தின் முன் னேற்றம் தடுக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. வேலைவாய்ப்புகள் குறைகின்றன. வழக்கறிஞர்கள் உண்மையில் பொதுநலன் இருந்தால் மட்டுமே பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் தேவை யற்ற வழக்குகள் தவிர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படாது என்றார்.
வழக்கறிஞர் பார்த்திபன் சட்ட தின உறுதிமொழி வாசித்தார். பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ நன்றி கூறினார்.