

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு சல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (55), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி முருகேஸ்வரியிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். அங்கிருந்த முனியசாமியின் மருமகன் கனகராஜ் (40) சண்டையை விலக்கச் சென்றார். அங்கு திடீரென அரிவாளைப் பறித்து கனகராஜ் முனியசாமியை வெட்டினார். இதில் முனியசாமி இறந்தார். கனகராஜை திருப்புல்லாணி போலீஸார் கைது செய்தனர்.