

மதுரை கூடல்புதூர் அருகே பனங்காடியிலுள்ள பலசரக்கு கடையில் கள்ள நோட்டைமாற்ற முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த காதர்பாட்சாவை(54) போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மதுரை செவக்காடு மணி(48), திருப்புவனம் அருகிலுள்ள பொட்டப் பாளையம் ஈஸ்வரன் (35), மதுரை மீனாம்பாள்புரம் விக்னேஷ் குமார்(34), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குருமூர்த்தி(61) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
239 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள், பைக், 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.