

ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம் நவம்பர் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் கரோனா காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைக்கான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
முகாமில் சுமார் 120 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் சர்க்கரை அளவின்படி அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள் உணவுமுறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் இடம்பெற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகளை பார்வை யிட்டனர்.