

மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் நவ.26-ம் தேதி கடுமையான மழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே இந்நேரத்தில் நெல் சம்பா, மக்காச்சோளம், பருத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது அரசு வங்கிகளிலோ அல்லது பொதுசேவை மையங்களிலோ பிரிமீயம் தொகையை செலுத்தி பயிரினை உடனே காப்பீடு செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் இழப்பீட்டை தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.