நள்ளிரவில் குடி நீர் குழாய் உடைப்பு

நள்ளிரவில் குடி நீர் குழாய் உடைப்பு
Updated on
1 min read

கடலூர் அண்ணா பாலம் வழியே மஞ்சக்குப்பம் பகுதிக்கு செல்லும் கூட்டு குடி நீர் குழாய் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அண்ணா பாலம் பெரியார் சிலைக்கு பின்புறம் உள்ள குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அதி வேகத்துடன் பாலம் வரை பீச்சி அடித்தது. ஏற்கெனவே மழை பெய்து வரும் நிலையில் இந்த தண்ணீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் நள்ளிரவில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குழாய் உடைப்பு விடிய, விடிய சரி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in