

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதையடுத்து தண்ணீரை வர வேற்று வைகை நதி மக்கள் இயக்கத்தினர் நேற்று சிறப்பு பூஜைகளைச் செய்தனர்.
வடகிழக்குப் பருவ மழையால் தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதுபோல், வைகை ஆற்றிலும் மழைநீர் ஓரளவு வரத் தொடங்கி யுள்ளது. வைகை நதி மக்கள் இயக்கத்தினர், தண்ணீரை வர வேற்று பூஜைகள் செய்தனர். வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் வைகை ஆற்றை பாழ்படுத்தக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சவுராஷ்ட்ரா சங்க சேவாவைச் சேர்ந்த அமர்நாத், விஎச்பி பொருளாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.