திண்டுக்கல்லில் குண்டர் தடுப்புசட்டத்தில் 2 பேர் கைது

திண்டுக்கல்லில் குண்டர் தடுப்புசட்டத்தில் 2 பேர் கைது
Updated on
1 min read

திண்டுக்கல் நகர் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முபாரக்அலி (40). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில் இவரை திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் எஸ்பி ரவளிபிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதேபோல, கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (25). இவர் சந்தன் செட்டிவலசு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இருவரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in