தென்காசியில் இன்று 10 இடங்களில் மறியல்: சிஐடியு

தென்காசியில் இன்று 10 இடங்களில் மறியல்: சிஐடியு
Updated on
1 min read

மத்திய அரசின் விவசாய கொள்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (26-ம் தேதி) நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், மாதர் சங்கம், மாணவர் சங்கம், வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எல், மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள், போக்குவரத்து, மின்சார அனைத்து சங்கங்கள், அங்கன்வாடி, சத்துணவு , பீடி, கட்டுமான, முறைசாரா தொழி லாளர்கள் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 10 இடங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது என்று சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in