

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
அதற்கு முன்னதாக சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. சிவாச் சாரியார்கள் சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய் தனர். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அலங்காரத்தில் எழுந் தருளினர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் ஆடி வீதிகளில் அம்மன், சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நவ.29-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் லட்ச தீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.