

மதுரையில் வழிப்பறிக்கு முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலை மையில் போலீஸார் பாண்டி கோயில் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, மஸ்தான்பட்டி சந்திப்புப் பகுதியில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற வண்டியூர் சதீஸ் குமார் (25), காமராசர்புரம் துரைப் பாண்டி(25), ராமர் (24), திருப்பதி (40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக காமராசர்புரத்தைச் சேர்ந்த முத்துமணி (24), நல்லுச்சாமி(25) ஆகியோரை தேடுகின்றனர்.