

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாய், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இரண்டு நாட்களில் 366 பேர் மதுரை வந்தனர்.
மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதன்படி ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்பி வருகின்றனர்.
துபாய், சிங்கப்பூரில் இருந்து 3 விமானங்கள் மூலம் மொத்தம் 366 பேர் கடந்த 2 நாட்களாக மதுரை வந்தனர்.
இவர்களில் 333 பேர் துபாய் மற்றும் சிங்கப்பூரில் கரோனா பரிசோதனை செய்திருந்தனர். 33 பேருக்கு மட்டும் மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.