கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Updated on
1 min read

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலகம் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நமது தேசத்துக்கு நற் பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் மத நல்லிணக்கத் துக்காகவும், சமுதாய ஒற்றுமைக் காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதியின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் ரூ. 20 ஆயிரம், இரண்டாம் பிரிவில் ரூ. 10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பிரிவில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இன்று (25-ம் தேதி) மாலை 5 மணிக்குள், தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தகுதியுள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 74017 03487 என்ற எண்ணுக்கு தொலைபேசி வாயி லாகவோ தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in