திருச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

திருச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்
Updated on
1 min read

நிவர் புயலால் திருச்சி மாவட்டத் தில் வெள்ளப் பெருக்கு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: திருச்சி மாவட்டத்தில் 2 மணி நேரத்தில் 80 மிமீ அளவுக்கு மழை பெய்தாலும், மழைநீர் வடிய சற்று தாமதமாகும் என்றாலும், வெள்ளப் பெருக்கு ஏற்படாது.

காவிரியில் 60,000 கன அடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும். ஆனால், இப்போது ஆற்றில் 1,000 கன அடி மட்டுமே தண்ணீர் செல்கிறது. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை ஆறு வாங்கக்கூடிய திறன் உள்ளது. காற்று வீசும் நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும். கடலோர மாவட்டங்களைவிட திருச்சி மாவட்டத்தில் காற்றின் வேகம் சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனால், மழைப் பொழிவு இருக்கும். திருச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய 154 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், காவிரிக் கரையையொட்டி அமைந் துள்ள 17 இடங்களில் அதிக பாதிப்பு நேரிடலாம். திருச்சி மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர் என்றார்.

தயார் நிலையில் காவல்துறை

‘நிவர்’ புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவலர்கள், தீயணைப்பு துறையி னருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்காக திருச்சி கிழக்கு வட்டத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, யு.டி.வி உயர்நிலைப்பள்ளி, இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, டி.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி, கார்மல் மெட்ரிக் பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 6 இடங்களும், மேற்கு வட்டத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவா சங்கம் உயர்நிலைப்பள்ளி, கார்மெல் மேல்நிலைப்பள்ளி, தேசியக் கல்லூரி, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, காவேரி மெட்ரிக்குலேசன் பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, ஆர்.சி பள்ளி, பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, கி.ஆ.பெ விசுவநாதம் உயர் நிலைப்பள்ளி, அரபிந்தோ பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 14 இடங்களும், ரங்கத்தில் அய்யனார் மாநகராட்சி ஆரம் பப்பள்ளி ஆகிய இடங்க ளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 66 காவல் அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் தகுந்த உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மாநகரில் வெள்ள சேதம் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 0431-23331929 என்ற எண்ணிலும், 96262-73399 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள் ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in