

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் 5-ம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் பவனி வந்து அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 17-ம் தேதி துர்க்கை அம்மன் உற் சவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமானது. கரோனா பரவல் காரணமாக, மாட வீதியில் நடைபெற வேண்டிய உற்சவம், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் பஞ்சமூர்த்திகளின் உற்சவமும் நடைபெற்றது. குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்கள் பவனி