

வாடிப்பட்டி அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த பாமக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள பூச்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், லாரி ஓட்டுநர்.
இவர் நவ. 22-ம் தேதி பூச்சம் பட்டியிலுள்ள குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் திடீரென லாரியை மறித்து, அனுமதியின்றி குவாரி யில் இருந்து கற்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனக்கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஓட்டுநர் அதற் கான அனுமதிச் சீட்டைக் கொடுத் தும் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்தனர். இது குறித்த தகவலின் பேரில் வாடிப்பட்டி சிறப்பு எஸ்ஐ கேசவராமச்சந்திரன் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தி லாரியை விடு வித்தார்.
விசாரணையில், லாரி ஓட்டு நருடன் தகராறு செய்த நபர்கள் பாமக மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் நவனிக்குமார் (29), வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் கார்த்திக் (32), மாவட்ட துணைத் தலைவர் சீனி (45) மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சசி (45) என்பது தெரியவந்தது.
அவர்கள் லாரி ஓட்டுநர் முருகே சனை மிரட்டி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.7,500-ஐ பறித்துக் கொண்டதாக அளித்த புகாரின்பேரில் 4 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.