

பிளஸ் 2 மாணவியைக் கடத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அருகிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த 18-ம் தேதி சிறப்பு வகுப்புக்கு பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே, மாணவியின் உறவினர் செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் திண்டுக் கல்லைச் சேர்ந்த ராமன் மகன் அழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாணவியை காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அழகன், அவரது தந்தை ராமன், தாய் வெள் ளையம்மாள், சகோதரர்கள் புலி என்ற ராமன், வீரமணி ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.