

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஊமச்சிகுளத்தில் பி.மூர்த்தி எம்எல்ஏ உட்பட 500 பேர் மறியல் செய்தனர்.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்த திருக்குவளை, அக்கரைப்பேட்டை, குத்தாலம் ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து 3 நாட்களிலும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் மறியல் உட்பட போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஊமச்சிகுளத்தில் திமுகவினர் நேற்று மறியல் செய்தனர். இதில் பி.மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மூர்த்தி, முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச் சிகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் அனு மதிக்கப்பட்டனர். வேல் யாத் திரைக்கு அனுமதி மறுப்பதுபோல் மறுத்து தாராளமாகச் செல்ல வழி ஏற்படுத்துகின்றனர். திமுக தேர்தல் பணியைத் திட்டமிட்டு போலீஸார் துணையோடு அரசு தடுக்கிறது. இதன் பின்னணியி லேயே உதயநிதி கைது செய் யப்பட்டுள்ளார்’ என்றார்.
இதில் கலந்து கொண்ட மூர்த்தி எம்எல்ஏ உட்பட 500 பேர் மீது ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.