

சத்துணவு மையங்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு கருவி, உணவு பரிசோதிக்கும் கொள்கலன்கள் மற்றும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், 100 சத்துணவு மையங்களுக்கு, சமைத்த மதிய உணவை பரிசோதிக்கும் கொள்கலன்களும், 42 தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், 1,818 சத்துணவு மையங்களுக்கு கரோனா தொற்று காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் உலர் உணவுப்பொருட்களுக்கான விநியோகப் பதிவேடுகள், உணவூட்டு செலவின பதிவேடுகள் மற்றும் உணவுப் பொருட்கள் வரவு செலவு பதிவேடுகள் ஆகியவற்றை சத்துணவு பணியாளர்களிடம் ஆட்சியர் ராமன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) முத்தழகு உடனிருந்தார்.