

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்சி., எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிளஸ் 1 சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க பள்ளிகளுக்கு சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
தற்போது, சேலம் மாவட்டத்தில், 175 மேல்நிலைப் பள்ளிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 25,425 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்காக முக்கிய பள்ளிகளுக்கு முதல்கட்டமாக சைக்கிகள் வந்துள்ளன. அரசு உத்தரவு வழங்கியதும், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.